இளைஞர்கள் சொந்தமாக வீடுகள் பெற உதவும் வகையில் கூடுதல் வீடுகளைக் கட்ட ராஜீவ் பரிந்துரைத்தார்

ஷா ஆலம், ஜனவரி 19: இளைஞர்கள் வீடுகளை சொந்தமாக்கி கொள்ள உதவும் வகையில் மலிவு விலையில் வீட்டு வசதிகள் பெறும் பிரச்சனைக்கு இந்த ஆண்டு புக்கிட் காசிங் சட்டமன்ற தொகுதி முக்கியத்துவம் அளிக்கும் என அதன் சட்டமன்ற உறுப்பினர் கூறினார்.

குறிப்பாக பெட்டாலிங் ஜெயா தெற்கு (பி. ஜே. எஸ்) பகுதியில், பொதுப் போக்குவரத்து நெட்வொர்க்குகளை ஒட்டிய இடங்களில் மேலும் அதிகமான சிலாங்கூர் கூ மலிவு விலை வீடுகள் கட்டப்பட வேண்டும் என்று ஆர் ராஜீவ் பரிந்துரைத்தார்.

“இந்தப் பகுதியில் மாஸ் ரேபிட் டிரான்ஸிட் 3 (எம்ஆர்டி3) வசதியைக் கட்டுவதற்கான முன்மொழிவை உருவாக்குவது உட்பட, பிஜேஎஸ் பகுதிக்கான மறுவடிவமைப்புத் திட்டத்தில் நான் கவனம் செலுத்துவேன்”.

“போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், புக்கிட் காசிங்கில் உள்ள இளைஞர்கள் அப்பகுதியை விட்டு வெளியேறுவதை தடுப்பதும் நோக்கமாகும்”. “எனவே அவர்களின் ஆறுதலுக்காக, இந்த வசதிகள் அனைத்தையும் உருவாக்க நான் முயற்சிப்பேன்” என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles