காசிங் ரேஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்பின் ஏற்பாட்டில் ஜாலான் காசிங்கில் துப்புரவு பணி!

கோலாலம்பூர் ஜன 20-
நாட்டில் புகழ்பெற்ற காசிங் ரேஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்பின் ஏற்பாட்டில் வரும் பிப்ரவரி 16 ஆம் தேதி ஜாலான் காசிங் மற்றும் காசிங் சிவான் கோவில் வளாகத்தில் Gotong Royong எனப்படும் துப்புரவு பணி மேற்கொள்ளப்படுவதாக காசிங் ரேஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் டாக்டர் வேல் குமார் தெரிவித்தார்.

வரும் பிப்ரவரி 16 ஆம் தேதி காலை 730 மணிக்கு மேல் இந்த துப்புரவு பணி தொடங்குகிறது.

காசிங் ரேஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் இடம் பெற்றுள்ள 80க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் துப்புரவு பணியை மேற்கொள்வார்கள்.

புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ், பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் லீ சியான் சுங் ஆகியோர் இதில் கலந்து கொள்கிறார்கள்.

காசிங் ரேஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் விளையாட்டில் ஆர்வம் செலுத்தினாலும் மறுபக்கம் சமூக பணிகளை செய்து வருகிறது என்று டாக்டர் வேல் குமார் தெரிவித்தார்.

இதனிடையே நேற்று காசிங் ரேஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்பின் தைப்பொங்கல் தமிழர் புத்தாண்டை முன்னிட்டு தைப்பொங்கல் விழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles