
கேரளா, ஜன 21-
ராணுவ அதிகாரியை திருமணம் செய்வதற்காக 2 ஆண்டுகளாக காதலித்த காதலனை விஷம் கொடுத்து கொன்ற பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து கேரளாவின் நெய்யான்றின்கரை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கன்னியாகுமரியில் வசித்த இளம் பெண் கிரீஸ்மா. இவர் கடந்த 2021ஆம் ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பு படித்தபோது, இளநிலை 3ஆம் ஆண்டு படித்த ஷரோன் ராஜ் என்ற மாணருடன் நட்பு ஏற்பட்டது.
இவர் திருவனந்தபுரம் பாரசாலா பகுதியைச் சேர்ந்தவர். இருவரும் காதலர்களாக பழகி வந்ததனர்.
இந்நிலையில் கிரீஸ்மாவுக்கு, தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரி ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
ஆனால் கிரீஸ்மாவுடனான காதலை துண்டிக்க ஷரோன் ராஜ் மறுத்துவிட்டார். இதனால் ஷரோன் ராஜூ வுக்கு பானத்தில் பாராகுவாட் களைக்கொல்லியை கலந்து கொடுத்து கொலை செய்தார்.
கேரளாவில் மரண தண்டனை பெற்ற மிக குறைந்து வயது பெண் கிரீஸ்மா என்பது குறிப்பிடத்தக்கது.

