
பாரிட் புந்தார், ஜன.21: இந்த நாட்டில் உள்ள நுகர்வோரின் தேவைகளை பூர்த்தி செய்ய, சீனப் புத்தாண்டின் போது மீன்களின் வரத்து போதுமானதாக இருக்கும்.
பிராந்திய மீனவர்கள் சங்கத்திடம் தற்போது 1,600 மெட்ரிக் டன்கள் உறைந்த மீன் இருப்பு உள்ளதாக மலேசிய மீன் மேம்பாட்டு வாரியத்தின் (LKIM) தலைவர் முகமட் ஃபைஸ் ஃபட்சில் கூறினார்.
“நாங்கள் பண்டிகைக் காலத்திற்கான ஆயத்தங்களைச் செய்துள்ளோம். போதுமான மீன் இருப்பு இருந்தால், சந்தையில் மீன்களின் விலை நிலையாக இருக்கும்” என்று அவர் கூறினார்.
LKIM-Petronas Return to School MADANI“ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இவ்வாறு கூறினார்.