
கோலாலம்பூர் ஜன 22-
நாட்டில் உள்ள பொது பல்கலைக்கழங்களில் இணைய வசதியை மேம்படுத்த அரசாங்கம் 600 மில்லியன் அதாவது 60 கோடி ரிங்கிட் நிதி ஒதுக்கியுள்ளது என்று தகவல் தொடர்பு அமைச்சர் பாமி பாட்சில் தெரிவித்தார்.
இணைய வசதிகள் இருந்தபோதிலும், பல சமயங்களில் ஏற்படும் இணையச் சிக்கல்கள் குறித்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி அமைச்சகத்தின்
கருத்துக்களைப் பெற்று இந்த மேம்படுத்தும் நடவடிக்கை இவ்வாண்டு இறுதிக்குள் நிறைவடையும் என்று எதிர் பார்க்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.
மேலும், தொலைப்பேசியின் தொடர்பு சேவையை மேம்படுத்தப்படும் என்றும் பல்கலைக்கழக வளாகங்களுக்கு வெளியே கூடுதல் தொலைத்தொடர்பு கோபுரங்கள் கட்டப்படும் என்றும் அவர் கூறினார்.
முதல் கட்டமாக மலாயா பல்கலைக்கழகம், மலேசிய இஸ்லாமிய அறிவியல் பல்கலைக்கழகம் பெர்லிஸ் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் இணையச் சேவை மேம்படுத்தப்படும் என்றார்.

