மாற்றுத் தொழிலாளர்களைவேலைக்கு அமர்த்திக் கொள்ள அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும்! பிரிஸ்மா – பிரிமாஸ் கூட்டாக வேண்டுகோள்

கோலாலம்பூர் ஜன 23-
Gantian எனப்படும் மாற்றுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என்று பிரிஸ்மா மற்றும் பிரிஸ்மா இன்று கூட்டாக அரசாங்கத்தை கேட்டுக் கொண்டன.

இந்திய உணவகங்கள் மற்றும் இந்திய முஸ்லிம் உணவகங்களில் வேலை செய்யும் அந்நியத் தொழிலாளர்கள் நாடு திரும்பினால் அவர்களுக்கு பதில் மாற்றுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள அரசாங்கம் அனுமதி வழங்கியது.

குறிப்பாக பத்து வெளிநாட்டு தொழிலாளர்கள் நாடு திரும்பினால் அவர்களுக்கு பதில் பத்து பேரை புதிதாக வேலைக்கு அமர்த்திக் கொள்ள அரசாங்கம் வாய்ப்பு வழங்கியது.

இதன் மூலம் உணவக உரிமையாளர்களா எவ்வித தங்கு தடையின்றி வியாபாரம் செய்து வந்தனர்.

ஆனால் கடந்த பத்து ஆண்டுகளாக Gantian தொழிலாளர்கள் கிடைக்காததால் உணவக உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆகவே இனியும் காலம் தாழ்த்தாமல் உள்துறை அமைச்சு மாற்று தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று பிரெஸ்மா தலைவர் டத்தோ ஹவலர் அலி மற்றும் பிரிஸ்மா தலைவர் டத்தோ சுரேஸ் கோவிந்தசாமி இன்று வலியுறுத்தினர்.

இன்று தலைநகரில் உள்ள இம்பியான் தங்கு விடுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்கள் இதனைத் தெரிவித்தனர் .

பிரெஸ்மா எனப்படும் மலேசிய இந்திய முஸ்லிம் உணவக உரிமையாளர் சங்கம் மற்றும் பிரிஸ்மா எனப்படும் மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கம் எதிர்நோக்கி இருக்கும் அந்நிய தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக இன்று பத்திரிகையாளர் கூட்டத்தை நடத்தின.

தற்போது அந்நியத் தொழிலாளர்களின் வயது வரம்பை 18 முதல் 45 வயதாக அரசாங்கம் நிர்ணயம் செய்துள்ளது.

இதுவும் எங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.

வெளிநாட்டினர் விரும்பி உண்ணும் பலவிதமான உணவுகள் மலேசியாவில் கிடைக்கிறது.

அந்த வகையில் நாட்டில் இந்திய உணவகங்கள் மற்றும் முஸ்லிம் உணவகங்கள் பாதிக்காமல் இருக்க அரசாங்கம் அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும்.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள உள்துறை அமைச்சு தடை விதித்துள்ளது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம் எங்களுக்கு சில தளர்வுகளை வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

குறிப்பாக உணவகங்களில் வேலை செய்ய 25,000 அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள அனுமதி கொடுக்க வேண்டும்.

இந்நாட்டில் இந்திய மற்றும் முஸ்லிம் உணவகங்கள் மூடப்படாமல் இருக்க அரசாங்கம் உதவி செய்ய வேண்டும் என்று டத்தோ ஹவலர் அலி மற்றும் டத்தோ கோவிந்தசாமி சுரேஸ் கேட்டுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles