

கிள்ளான், ஜன 23-
போர்ட் கிள்ளான் ஜாலான் சரோஜா அருள்மிகு ஸ்ரீ நாகம்மாள் ஆலயத்தில் மஇகா பணிப்படையினரின் சிறப்புப் பிரார்த்தனை விழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது.

மஇகா பணிப்படை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் சமூகத்தினரின் முன்னிலையில் இந்த பூஜை சிறப்பாக நடைபெற்றது.
அருள்மிகு ஸ்ரீ நாகம்மாள் ஆலய அறங்காவலர் டத்தோ எம்.செல்லத்தேவன் மற்றும் டத்தோ பாலகுமாரன் குடும்பத்தினர் கலந்து கொண்டு விழாவில் சிறப்பித்தனர்.
இந்த தருணத்தில் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ம இகா தேசிய உச்சமன்ற உறுப்பினர் மற்றும் ம இகா தேசிய விளையாட்டு பிரிவு தலைவர் ஆண்ட்ரூ டேவிட் கூறினார்.

தேவன் டத்தோ பாலகுமாரன் (ஆலயத் தலைவர்) இந்த சிறப்புப் பிரார்த்தனை விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளை செய்தார்.
. மேலும் வந்திருந்த பக்தர்களுக்கு சுவையான அன்னதானமும் வழங்கப்பட்டது.
திரு. சசிதரன் (சிலாங்கூர் மஇகா செயலாளர்), திரு. தர்மலிங்கம் (MIC கிள்ளான் பிரிவின் தலைவர்) இந்த விழாவில் கலந்து கொண்டது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று அவர் சொன்னார்.

