
உலகின் மிக தொன்மை மிகு மொழி, இனம், சமயம், அரசியல், வாழ்வியல் நெறி, வரலாற்று பின்னணியை அடிப்படையாக கொண்டது குமரிக் கண்டத்தின் எச்சமாக திகழும் இந்திய துணை கண்டத்தின் ஒரு பகுதியான தமிழ் நாடு. இன்று தமிழ் நாட்டின் அரசியல் களத்தில் *இந்திய தேசியம் —
திராவிடம் —- தமிழ் தேசியம் என்ற கருத்தியல் சிக்கல்/முரண்பாடு விவாத பொருள் பெரிதாகி வருகிறது.
இந்த திராவிட மற்றும் தமிழ் தேசியம் விவாதத்தின் தாக்கமானது தமிழ்நாடு மட்டுமின்றி தமிழ் கூறும் நல்லுலகம் எங்கும் பரவி வருகிறது.
இன்று திராவிடமா ? அல்லது தமிழ் தேசியமா ? கொள்கை முன்னெடுப்பு பன்னாட்டு தமிழர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது..
கருத்தியல் என்பது கோட்பாடு அல்லது தத்துவம் என்பதாகும்.
ஒரு மனிதன் இந்த உலகைப் பார்க்கும் முறையாகும். ஒவ்வொரு மனிதரும் இந்த உலகத்தில் நடக்கும் நிகழ்வுகளை அவர்கள் ஏற்றுகொண்ட தத்துவத்தின் வழியில்தான் பார்ப்பார்கள்.
உலகில் மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே மக்களை வழி நடத்த, மக்களை பாதுகாக்க,
மக்களை ஒற்றுமைப்படுத்த
சமூகத்தை முன்னேற்ற,
கொள்கைகள் உருவாகும்.
ஆனால் , அது தொடர்ச்சியாக நிலைப்பதில்லை. காரணம் அது மக்களை அடிமைப்படுத்த போலியாக கட்டமைக்கப்பட்ட கோட்பாடாக இருக்கலாம் , அல்லது நாகரிக வளர்ச்சியின் காரணமாக தோல்வி அடைந்திருக்கலாம் .
அப்படி உறுதியாக ஒரு கோட்பாடு நிலைத்திருக்குமேயானால், அந்தக் கோட்பாட்டில் உருவாகும் கருத்துகள், கொள்கைகள் இன்றளவும் மக்களால் ஏற்றுகொள்ளப்படும்.
உதாரணம் திருக்குறள், 3000 வருடங்கள் முன்பு மனிதன் மனிதனாக வாழ உருவாகிய கருத்துகள் இன்றளவும் நிலைத்திருக்கிறது. அதை எழுதிய திருவள்ளுவரும் இன்றளவும் உலக மக்களால் கொண்டாடப்படுகிறார்.
அது போல,
மக்கள் ஏற்றுகொண்ட தத்துவத்தின் வழி சமகாலத்தில் நடக்கும் எந்த கோட்பாடு அவர்களின் வாழ்வியலுக்கு எதிராக இருக்கிறதோ, அந்த கோட்பாட்டை முற்றிலும் வேரோடு அழிக்க தொடங்கும் போது, அதோடு சேர்ந்து அந்த கோட்பாட்டின் அடையாளமாக இருக்கும் தலைவர்களின் பிம்மமும் உடைகிறது என்பதை இன்றைய சூழலில் நம்மால் கண் கூடாக பார்க்க முடிகிறது.
ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய சிந்தனைகள், கொள்கைகள் உருவாகிகொண்டேதான் இருக்கும்.
அடுத்த நூற்றாண்டில் ஜனநாயகத்தை விட ஒரு சிறந்த கொள்கை உருவாகலாம்.
எந்தவொரு கொள்கையும் ஓர் அமைப்பு அல்லது சமகால அரசால் உருவாக்கப் பட்டாலும், ஒவ்வொரு தேசிய இனமும் அவர்களின் இனம், மொழி , சமய நம்பிக்கை, பண்பாடு, வரலாறு, கல்வி, பொருளாதாரம், மற்றும் அரசியல் போன்ற அடிப்படை உரிமைகளை பாதுகாத்து கொள்வதற்கு உரிமை இருக்கிறது. அதற்கு எதிராக செயல்படும் அத்தனை கொள்கைகளும் தூக்கியெறிப்பட வேண்டும்
கணேசன்
உரிமை
பகாங் மாநில ஒருங்கிணைப்பாளர்

