
பெட்டாலிங் ஜெயா, ஜன 27-
தமிழ் கடவுள் முருகப் பெருமானுக்கு கொண்டாப்படும் தைப்பூசம் மலேசியாவில் ஒரு மாபெரும் விழாவாக விளங்குகிறது.
அந்த வகையில் வரும் பிப்ரவரி 10,11 ஆம் தேதிகளில் கொண்டாடப்படும் தைப்பூசத்தில் தூய்மையை கடைப்பிடிப்போம் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினரும் பணிப்படைத் தலைவருமான டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கேட்டுக் கொண்டார்.
பத்துமலை தைப்பூசம், பினாங்கு தைப்பூசம், ஈப்போ தைப்பூசம் உட்பட நாடு தழுவிய அளவில் கொண்டாடப்படும் தைப்பூசத்தில் நாம் அனைவரும் தூய்மையை கடைப்பிடிப்போம்.
கூடாரங்கள் அமைத்து பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் குளிர்பானங்கள் வழங்கும் தரப்பினர் முறையாக குப்பைத் தொட்டிகளை அமைக்க வேண்டும்.
பக்தர்களும் கண்ட கண்ட இடங்களில் குப்பைகளை போடாமல் குப்பை தொட்டிகளில் குப்பைகளை போடும் படி அவர் கேட்டுக்கொண்டார்.
பத்துமலை தைப்பூசத்தை முன்னிட்டு 500 தொண்டூழிய படையினர் கடமையில் ஈடுபடுவார்கள்.
பத்துமலை தைப்பூசத்தை முன்னிட்டு செலாயாங் நகராண்மைக் கழகம் பல இடங்களில் குப்பை தொட்டிகளை அமைப்பார்கள்.
மலேசிய இந்து சங்கம், இந்து தர்ம மாமன்றம் உட்பட பல அமைப்புகள் இணைந்து தூய்மையான தைப்பூசத்தில் பங்கேற்பாளர்கள் என்று அவர் சொன்னார்.

