மற்றவர்கள் போலவே நஜிப்பும் அனைத்து வாய்ப்புகளுக்கு தகுதியானவர்: ஊழல் எதிர்ப்பு அரசு சாரா அமைப்பு

மற்றவர்கள் போலவே முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பும் அனைத்து
வாய்ப்புகளுக்கு தகுதியானவர்.

மலேசிய ஊழல் கண்காணிப்பு குழுவின் தலைவர் ஜாய்ஸ் அப்துல் கரிம் இதனை கூறினார்.

நஜிப் ரசாக் தனது தவறுகளுக்குப் பரிகாரம் செய்ய ஒரு வாய்ப்பு தேவை.

குறிப்பாக, அவர் மீதமுள்ள சிறைத் தண்டனையை வீட்டிலேயே அனுபவிக்க அனுமதிக்கும் கூடுதல் உத்தரவு தொடர்பான பிரச்சினை தொடர்ந்து கவனத்தைப் பெறுகிறார்.

முன்னாள் பிரதமரின் தண்டனைக் குறைப்பு தொடர்பான செயல்முறையை அனைத்து தரப்பினரும் மதிக்க வேண்டும்.

நஜிப்புக்கு மற்ற அனைவரையும் போலவே அதே வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான எங்கள் முயற்சிகளில் நாங்கள் உறுதியாக நிற்போம்.

மேலும்  அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளபடி மாட்சிமை தங்கிய மன்னர் எடுத்த முடிவுகளுக்குக் கீழ்ப்படிந்து மதிக்க வேண்டும் என்று அவர் ஒர் அறிக்கையில் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமரான டத்தோஸ்ரீ நஜிப்பின் மகத்தான பங்களிப்பை மறுக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles