
கேளிக்கை விடுதி முன் பொதுமக்களை இரு கார்கள் மோதி தள்ளுய விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணைக்காக நால்வரைக் கைது செய்தனர்
கோலாலம்பூர் மாநிலத்தின் காவல்துறை துணைத்தலைவர் அக்மார் அயோப் இதனை உறுதிப்படுத்தினார்
இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்ததாக அவர் கூறினார்
கைது செய்யப்பட்ட அனைத்து சந்தேக நபர்களுக்கு எதிராக தடுப்பு காவல் விண்ணப்பம் இன்று மேற்கொள்ளப்படும் என்று அவர் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தார்
முன்னதாக, இரு கார்கள் அங்கிருந்த பொதுமக்களைக் கண்மூடித்தனமாக வாகனத்தைக் கொண்டு மோதியதாக காணொளி ஒன்று வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலானது
இந்த சம்பவம் குற்றவியல் சட்டம் செக்ஷன் 307இன் கீழ் விசாரிக்கப்படுகிறது என்றும் அவர் சொன்னார்

