
கோலாலம்பூர்:
கெமாஸ் அமைப்பின் கீழ் உள்ள மழலையர் பள்ளியின் வேலியை ஆடவன் ஒருவன் மோதி தள்ளிய சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டான்
கைது செய்யப்பட்ட ஆடவன் போதைப்பொருளுடன் உடன் வைத்திருந்ததாக மலாக்கா தெங்கா மாவட்ட காவல்துறை தலைவர் கிரிஸ்தொபர் பதிட் கூறினார்
15.46 கிரேம் என்று நம்பப்படும் ஹெரோயின் வகை போதைப்பொருள் ஆடவனின் பாக்கெட்டில் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது என்று அவர் சொன்னார்
இந்நிலையில் சுகாதார பரிசோதனைக்காக சந்தேக நபர் மலாக்கா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்
அவ்வாடவர் ஏற்கனவே மூன்று குற்றப்பின்னணி கொண்ட வழக்கில் இருப்பதாகவும் இந்த சம்பவம் குற்றவியல் சட்டம் செக்ஷன் 39பி இன் கீழ் விசாரிக்கப்படுவதாக அவர் சொன்னார்

