எல்லா காலகட்டத்திலும் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்திற்கு துணையாக இருக்கும் ரத்னவள்ளி அம்மையாருக்கு நன்றி!

கோலாலம்பூர் ஜன 31-
மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்திற்கு எல்லா காலகட்டத்திலும் துணையாக இருக்கும் மனிதநேய மாமணி ரத்னவள்ளி அம்மையாருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன் தெரிவித்தார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இதுவரை 6 குடும்ப தின விழா நடைபெற்றுள்ளது.

ஒவ்வொரு குடும்ப தின விழா வெற்றி பெற ரத்னவள்ளி அம்மையார் முழு ஆதரவு வழங்கி வருகிறார்.

இவ்வாண்டு நடைபெற்ற மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் குடும்ப தின விழாவுக்கு 400 பேருக்கு சுவையான உணவை அவர் வழங்கினார்.

மேலும் இதற்கான மொத்த செலவை அவர் ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விழாவில் அனைத்து பத்திரிகை ஆசிரியர்களுக்கும் பொன்னாடை போர்த்தி மாலைகள் அணிவித்து ரத்னவள்ளி அம்மையார் சிறப்பு செய்தார்.

அவருக்கு இந்த தருணத்தில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று முத்தமிழ் மன்னன் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles