
கோலாலம்பூர் ஜன 31-
மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் குடும்ப தின விழா நேற்று முன்தினம் dewan komunity koparasi polis 2 Batu muda மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.
ம இகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் சிறப்பு வருகை தந்து குத்து விளக்கு ஏற்றி வைத்து விழாவை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
இந்த விழாவில் டத்தோஸ்ரீ சரவணன் தலைமையில் 15 மூத்த பத்திரிகையாளர்கள் மற்றும் பணியாளர்கள் சிறப்பு செய்யப்பட்டனர் .
அதே சமயம் தமிழ் பத்திரிகை ஆசிரியர்களை மனிதநேய மாமணி ரத்னவள்ளி அம்மையார் பாராட்டி கௌரவித்தார்.
இந்த விழா வெற்றி பெற நிதியுதவி மற்றும் பரிசு பொருட்களை வாங்கி கொடுத்து அனைவருக்கும் விழா ஏற்பாட்டுக் குழு தலைவர் ஜீவா ராஜா நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

மிகப்பெரிய அளவில் நடைபெற்ற இந்த விழாவில் தகவல் தொடர்பு துறை அமைச்சர் பாமி பட்சில் சிறப்பு அதிகாரி டத்தோ சிவபாலன், ம இகா இளைஞர் அணி தலைவர் அர்விந்த், ம இகா தேசிய விளையாட்டு பிரிவு தலைவர் ஆண்ட்ரூ டேவிட், புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ், கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், கிள்ளான் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ, மலேசிய இந்தியர் கட்சி தலைவர் புனிதன், ம இகா தேசிய உதவித் தலைவர் டத்தோ முருகையா, டத்தோ இராமநாதன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

