
கெடா பாலிங் மாவட்டத்தில் அமைந்துள்ள கத்துப்பா தோட்ட தமிழ்ப்பள்ளி விவகாரத்தில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் தலையிட வேண்டும் என ஜொகூர் தமிழ் ஆர்வலரான திரு சந்திர சேகரன் ஆறுமுகம் அறைகூவல் விடுத்துள்ளார்.
ஏற்கனவே கைவிட்டுப்போன பெட்னோக் தோட்ட தமிழ்ப்பள்ளியின் நிலைமை தற்பொழுது இந்த கத்தும்பா தமிழ்ப்பள்ளிகு ஏற்பட உள்ளது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என அவர் நினைவுறுத்தினார்.
சுமார் 70 ஆண்டுகால வரலாறு கொண்ட அந்த தமிழ்ப்பள்ளி சைம் டாபி நிறுவனத்துக்கு சொந்தமான நிலத்தில் இருந்தது பிறகு தற்போது அந்த நிலம் கைமாறி விட்டதால் அந்த தமிழ்ப்பள்ளி அங்கும் இங்குமாக தத்தளித்து கொண்டு இருப்பது வேதனை அளிப்பதாக தெரிவித்த திரு சந்திர சேகரன், கல்வி அமைச்சர் பட்லினா சிடேக் இந்த விவாகரத்தில் தலையிட்டு ஒரு மாற்று இடம் அந்த பள்ளிக்கு வழங்க சையம் டாபி நிறுவனத்தை வலியுறுத்த வேண்டும் என முன்னாள் பெக்கோ சட்டமன்ற வேட்பாளருமான திரு சந்திர சேகரன் கேட்டு கொண்டார்.

