12,000 வெள்ளிக்கு குழந்தையை விற்பனை செய்ததாக Tuisyen ஆசிரியை மீது குற்றச்சாட்டு

சட்டவிரோதமான முறையில் 12,000 வெள்ளிக்கு குழந்தையை விற்றதாக டுவிஷன் ஆசிரியை மீது இன்று பினாங்கு செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

தனக்கு எதிராக வாசிக்கப்பட்ட குற்றச் சாட்டை மறுத்து 62 வயதான ஆசிரியை ஜாலியா அமாட் விசாரணையை கோரினார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி ஜாலான் பினாங்கில் உள்ள ஒரு ஹோட்டலில் இவர் இந்த குற்றத்தை புரிந்தார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

கடும் நிபந்தனைகளுடன் 10,000 வெள்ளி ஜாமினில் விடுவிக்கப்பட்டிருக்கும் இவர் தனது அனைத்துலக கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது..

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles