
நாட்டில் ஐந்து லட்சம் இல்லத்தரசிகள் சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்ய மனித வள அமைச்சு இலக்கு வைத்திருக்கிறது என்று அதன் அமைச்சர் வி. சிவகுமார் தெரிவித்தார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு முன்னாள் துணை பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா சிந்தனையில் உருவான இந்த திட்டம் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி செயல் படுத்தப்பட்டது..
இவ்வாண்டு டிசம்பர் 8 ஆம் தேதி வரை 1,092 இல்லத்தரசிகள் தானாக முன்வந்து தங்களைப் பதிவு செய்துள்ளனர்.
தங்கள் தொகுதியில் உள்ள இல்லத்தரசிகள் இந்த திட்டத்தில் பதிந்து கொள்ள எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீவிரமாக களம் இறங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

