நேசா கூட்டுறவு கழகம் 40 மாணவர்களுக்கு கல்வி நிதியை வழங்கி பேருதவி புரிந்தது

நேசா கூட்டுறவு கழகத்தின் சார்பில் நேற்று 40 இந்திய மாணவர்களுக்கு கல்வி நிதியாக ஒரு லட்சம் வெள்ளி வழங்கப்பட்டது.

நேசா கூட்டுறவு கழகத்தின் தலைவர் டத்தோ சசிகுமார் தலைமையில் இந்த கல்வி நிதி வழங்கப் பட்டது.

கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை 700 மாணவர்களுக்கு 7 லட்சம் வெள்ளி கல்வி நிதியாக வழங்கப்பட்டுள்ளது.

உயர் கல்வி பயிலும் நேசா கூட்டுறவு கழகத்தின் உறுப்பினர்களின் சுமையை குறைக்கும் வகையில் ஆண்டு தோறும் கல்வி நிதி வழங்கப்படுகிறது என்று டத்தோ சசிகுமார் தெரிவித்தார்.

கூட்டுறவு கழகத்தின் கூட்டரசு பிரதேச மாநில துணை இயக்குநர் அலிஃப் சிறப்பு வருகை புரிந்த வேளையில்
நேசா கூட்டுறவு கழகத்தின் செயலாளர் பி. ஆதி நாராயணன் நிகழ்ச்சியை சிறப்பாக வழி நடத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles