

மலேசியா தமிழர் குரல் விலாயா மாநில ஏற்பாட்டில் முக ஒப்பனை பயிற்சியில் தேர்ச்சி பெற்ற 30 மகளிர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி சிறப்பிக்கும் பட்டது.
எஸ்.ஜி. அகாடமியில் ஆதரவோடு இந்த ஆறு மாத பயிற்சி பட்டறையை குமாரி விக்னேஸ்வரி நடத்தினார்.
60 மகளிர்கள் கலந்து கொண்ட போதிலும் 30 பேர் பயிற்சியை வெற்றிகரமாக முடித்து சான்றிதழ் பெற்றனர்.
கோலாலம்பூரில் நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வுக்கு மலேசியா தமிழர் குரல் கெளரவ செயலாளர் சரவணன் தலைமையேற்றார்.
விலாயா மாநில தமிழர் குரல் தலைவர் ஆசிரியர் ஜெனர்த்தன் கலந்து சிறப்பித்தார்.
முக ஒப்பனை பயிற்சி சிறப்பாக நடைபெறுவதற்கு ஆறு மாதங்களாக இடத்தை வழங்கிய எஸ் ஜி. அகாடமி உரிமையாளர் டத்தோஸ்ரீ கணேஷ் இந்த விழாவில் சிறப்பிக்கப்பட்டார்.
இது போன்ற பயிற்சி பட்டறைகள் மூலம் இந்திய பெண்கள் கைத்தொழில் கற்று சொந்தமாக வியாபாரம் செய்து வாழ்க்கையில் முன்னேறலாம் என்று மலேசிய தமிழர் குரல் கெளரவ செயலாளர் சரவணன் தெரிவித்தார்.

