தொழிலாளர்களை சுரண்டும் மலேசியா முதலாளிகள் இந்தோனேசியாவில் நுழைய தடை!

தொழிலாளர்களை தவறாக வழி நடத்தி சுரண்டும் மலேசியா முதலாளிகள் இந்தோனேசியாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவுக்கான இந்தோனேசிய தூதர் ஹெர்மோனோ கூறுகையில் இந்தோனேசியாவின் நீதியை நிலைநாட்டுவதற்காக, இந்தோனேசியா தொழிலாளர்களை சுரண்டும் மலேசியர்களுக்கு பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றார்.

தொழிலாளர்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

மனித கடத்தல் குற்றச்சாட்டில் இருந்து டிசம்பர் 9ஆம் தேதி விடுவிக்கப்பட்ட ரட்சுவான் அபு ஹாட்ஜிம் மற்றும் அவரது மனைவி ரோஸ்னாஜிஹா ரம்லி ஆகியோர் இந்தோனேசியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்ட முதல் மலேசியர்கள் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles