உலகக் கிண்ணம் – இறுதியாட்டத்திற்கு தேர்வு பெறப்போவது யார்? நாளை அதிகாலை அர்ஜெண்டினா – குரோசியா பலப்பரீட்சை

கட்டார் நாட்டில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை அடைந்திருக்கும் வேளையில் நாளை டிசம்பர் 14 ஆம் தேதி அதிகாலை 3.00 மணிக்கு நடக்கும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினாவை எதிர்த்து குரோசியா மோதுகிறது.

இரண்டு முறை உலகக் கிண்ணத்தை வென்று சாதனை படைத்திருக்கும் அர்ஜென்டினா அணியை புகழ் பெற்ற கோல் மன்னன் மெஸ்ஸி வழிநடத்திக் கொண்டிருக்கிறார்.

2018 இல் நடைபெற்ற உலகக் கிண்ண போட்டி இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற குரோசியா 2-4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸிடம் தோல்வி அடைந்தது.

இம்முறை அர்ஜென்டினாவும் குரோசியாவும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் நாளை அதிகாலையில் நடக்கும் இவ்விரு அணிகள் இடையிலான ஆட்டத்தில் அனல் பறக்கலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles