நீதிமன்ற தடையுத்தரவால் Sentul kampung railway ஸ்ரீ நாகம்மாள் கோவில் உடைபடுவதில் இருந்து காப்பாற்றப் பட்டது

நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த செந்தூல் ஸ்ரீ நாகம்மாள் கோவில் இன்று உடைப்படுவதில் இருந்து காப்பாற்றப்பட்டது.

பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி. பிரபாகரன் உதவியோடு இன்று நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெறப்பட்டதால் கோவில் உடைக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டது.

கோவிலை அகற்ற ஓய்.டி.எல். மேம்பாட்டு நிறுவனம் நீதிமன்றம் ஆடையை பெற்றுள்ளது.

இந்நிலையில் கோவிலை அகற்றும்படி மேம்பாட்டு நிறுவனம் இன்று முயற்சியை மேற்கொண்டபோது நீதிமன்றத்தில் பெறப்பட்ட தடையுத்தரவால்
அது தடுத்து நிறுத்தப்பட்டது என்று ம இகா மத்திய செயலவை உறுப்பினர் ஏ.கே. இராமலிங்கம் தெரிவித்தார்.

இன்று கோவிலை காப்பாற்றும் முயற்சியில் மலேசியா இந்து ஆலயங்கள் ஒருங்கிணைப்பு பேரவை பொருளாளர் டத்தோ சுரேஷ், விலாயா மாநில
மஇகா தலைவர் டத்தோ சைமன் ராஜா, பத்து நாடாளுமன்ற தொகுதி மஇகா தலைவர் பாலகுமாரன் மற்றும் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் செயலாளர் செல்வம்,
ஆலயச் செயலாளர் ஹரிஹரன் லெட்சுமணன் உட்பட நூறுக்கும் மேற்பட்டோர் அணி திரண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles