

புதிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கத்தில் நாட்டில் எந்தவொரு கோவிலும் உடைப்படக்கூடாது என்று கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆட்சி அமைக்க மலேசியா இந்தியர்கள் முழு ஆதரவு வழங்கி இருக்கிறார்கள்.
அந்த வகையில் நாட்டில் கோவில்கள் உடைப்படுவதை அவர் தடுத்து நிறுத்த வேண்டும்.
உடைப்படும் அபாயத்தில் உள்ள கோவில்கள் பிரச்சனைக்கு முத்தரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்ற
மஇகா மத்திய செயலவை உறுப்பினர் டத்தோ ஏ.கே.இராமலிங்கம் வலியுறுத்தி உள்ளார்.
அதை விடுத்து ஒருசாரார் நீதிமன்ற ஆணையை பெற்று கோவில்களை உடைப்பதை இந்த அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும்.
நாட்டில் இந்து கோவில்கள் எதிர் நோக்கி இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் புதிய குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
செந்தூல் ரயில்வே கம்பத்தில் நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த நாகம்மாள் கோவில் உடைப்படுவதில் இருந்து காப்பாற்றும் முயற்சியில் களம் இறங்கி இருக்கும் கோவில் நிர்வாகத்திற்கு ஆதரவு தெரிவிக்க டத்தோ ஏ.கே. இராமலிங்கம் உட்பட நூறுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் களம் இறங்கியுள்ளனர்.

