பத்துமலை திருத்தலத்தில்பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருக்கு உற்சாக வரவேற்பு!

கோலாலம்பூர் பிப் 7-
பத்துமலை திருத்தலத்திற்கு சிறப்பு வருகை தந்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களுக்கு இன்று உற்சாக வரவேற்பு நல்கப்பட்டது.

மாலை 3.30 மணிக்கு மேல் பத்துமலை திருத்தலத்திற்கு வருகை புரிந்த அவருக்கு மேள தாளத்துடன் வரவேற்பு நல்கப்பட்டது.

ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர். நடராஜா அவர்கள் பிரதமருக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பின்னர் தற்போது பயன்படுத்தப்படும் மண்டபத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் பார்வையிட்டார்.

இந்த
மண்டபத்திற்கு பதிலாக புதிய மண்டபம் கட்டப்படுவது தொடர்பில் பிரதமருக்கு டான்ஸ்ரீ நடராஜா விளக்கம் அளித்தார்.

இந்த நிகழ்வில் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி, தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன், டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு, ம இகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன், உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்யா பிரகாஷ், பிரதமரின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன், புக்கிட் மெலாவாத்தி தொகுதி ஒருங்கிணைப்பாளர் தீபன் சுப்ரமணியம், செலாயாங் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம்ஸ் லியோங், ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வெய்க் கியாட், உலு சிலாங்கூர் கவுன்சிலர் புவனேஸ்வரன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles