பத்துமலை திருத்தலத்திற்கு பிரதமரின் வருகையானது மடானி அரசாங்கத்தின் அக்கறையை புலப்படுத்துகிறது என்கிறார் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ

கோலாலம்பூர் பிப் 7-
முருகப் பெருமானுக்கு கொண்டாப்படும் தைப்பூசத்தை முன்னிட்டு இந்து பெருமக்களுக்கு தைப்பூச வாழ்த்தினை இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ பதிவு செய்துள்ளார்.

தைப்பூசத் திருநாள் கொண்டாட்டம் என்பது நமது நாட்டுக்கே உண்டான தனித்துவம் மிக்க விழாவாகும்.

முன்கூட்டியே பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்தி வருகின்றனர்.

இன்று பத்துமலை திருத்தலத்திற்கு வருகை புரிந்த போது பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை பக்தி பரவசத்துடன் செலுத்துவதை நேரில் கண்டு களித்தேன்.

நமது அன்புக்குரிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் இன்றைய பத்துமலை திருத்தலத்திற்கு வருகை புரிந்தது நாட்டு மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்த மடானி அரசின் உறுதிபாட்டை வலுப்படுத்துகிறது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த வருகையின் போது ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர். நடராஜா, அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் மற்றும் ம இகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன், சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி, சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு ஆகியோருடன் உரையாடி மகிழ்ந்தார்.

தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர் நடராஜா முன் வைத்த கோரிக்கைகளுக்கு பத்துமலை திருத்தலத்தில் அபிவிருத்தி திட்டங்களுக்கு மத்திய அரசு, சிலாங்கூர் மாநில அரசுடன் இணைந்து உதவும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.

இதனிடையே இவ்வாண்டு
தைப்பூசத்தை முன்னிட்டு இரண்டு பெரிய மின்னியல் திரையை பினாங்கு தண்ணீர்மலை அருள்மிகு பால தண்டாயுதபாணி ஆலயத்திற்குத் வழங்கவிருப்பதாக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

இந்த மின்னியல் திரையின் வழி தைப்பூசத்திற்கு வரும் பக்தர்கள் தூரத்திலிருந்தே ஆலயத்தில் நடைபெறும் தரிசனத்தை காணொலி மூலம் நேரில் கண்டு மகிழலாம் .

பல்லின மக்கள் வாழும் மலேசியா திருநாட்டில் நல்லிணக்கத்தை பேணும் மடானி அரசாங்கத்தின் உறுதிப்பாட்டிற்கு இணங்க, இந்தியர்களின் நலன் காக்கவும், அவர்களது நம்பிக்கைக்கு மதிப்பளிக்கவும் இலக்கவியல் அமைச்சு மேற்கொள்ளும் முயற்களில் இதுவும் ஒன்றாகும்.

மேலும் இந்திய சமுதாயம் சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள், மின்னியல் வணிகத்தில் ஈடுபட வேண்டும் என்பதில் அமைச்சு தீவிர கவனம் செலுத்துகிறது.

அதிவளர்ச்சி காணும் மின்னியல் பொருளாதாரத்தில் இந்தியர்கள் பின் தங்விடக்கூடாது என்பதில் இலக்கவியல் அமைச்சு கவனமாக இருக்கிறது.

இன்று பத்துமலையில், பெரும்பாலான சிறு குறு வணிகர்கள் இலக்கவியல் முறையில் தங்களது வணிகத்தை நடத்துவது பாராட்டுக்குறியது.

இந்த விழிப்புணர்வு தொடர வேண்டும், இன்னும் அதிகமான இந்திய வணிகர்கள் தங்களது வியாபாரத்தை மேம்படுத்திக் கொள்ள இலக்கவியல் வணிகத்திற்கு மாறுவது சிறப்பு என்று அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

கடந்த ஆண்டு இலக்கவியல் அமைச்சு, இந்தியர்களின் மேம்பாட்டுக்குக் கணிசமான தொகையை வழங்கியது.

ஆலய மேம்பாட்டுப் பணிகள், இந்திய அரசு சார்பற்ற இயக்கங்களுக்கு நிதி உதவி, தமிழ்ப்பள்ளிகளுக்கு நிதி உதவி என கடந்த ஆண்டு வழங்கியது போலவே, இந்த ஆண்டும் தொடரும் என்றார்.

தைப்பூசத்தை முன்னிட்டு பத்துமலைக்கு வருகை புரியும் பக்தர்களுக்கு இலக்கவியல் அமைச்சு சார்பில் அன்னதானமும் குடிநீரும் வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles