
கோலாலம்பூர் பிப் 7-
தைப்பூச திருவிழாவை இந்து பெருமக்கள் அமைதி மற்றும் பாதுகாப்புடன் கொண்டாடி மகிழும் படி
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.
தைப்பூச விழாவின் ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக பத்துமலைக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சிறப்பு வருகை புரிந்தார்.
டான்ஸ்ரீ நடராஜா தலைமையிலான ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தினர் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இவ்வேளையில் அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
மேலும் இந்து மக்கள் தைப்பூச விழாவை அமைதியுடன் பாதுகாப்புடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாட வேண்டும் என்று பிரதமர் கூறினார்.
பல அபிவிருத்திகளின் வாயிலாக தேவஸ்தானம் பத்துமலையை உலக தரத்திற்கு உயர்த்தியுள்ளது.
அதே வேளையில் பத்தமலையில் புதியதாக மேற்கொள்ளப்படவிருக்கும் பல்நோக்கு மண்டபம், மின் படிக்கட்டு ஆகிய திட்டம் குறித்து எனக்கு டான்ஸ்ரீ நடராஜா விளக்கம் அளித்தார்.
இத் திட்டங்கள் குறித்து உரிய ஆய்வுகளுக்கு பின் அனுமதி வழங்கப்படும்.
குறிப்பாக மத்திய, மாநில அரசுகள் இத் திட்டங்களுக்கு தாமதமளிக்காமல் ஆதரவளிக்கும் என்று டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்

