
கோலாலம்பூர் பிப் 8-
முஸ்லிம்களுக்கான புதிய வழிகாட்டல் பரிந்துரைகளை ரத்து செய்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அமைச்சரவையின் நடவடிக்கையை பெரிதும் பாராண்டுவதாக பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தெரிவித்தார்.
அமைச்சரவை எடுத்துள்ள இந்த அதிரடி முடிவு சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு அமைந்துள்ளது என்று அவர் சொன்னார்.
இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தலங்கள், மற்றும் இறுதி சடங்குகளில் முஸ்லிம்கள் கலந்து கொள்ள அனுமதி பெற வேண்டும் என்று முன்மொழியப்பட்ட
வழிகாட்டுதல்களை அமைச்சரவை ரத்து செய்துள்ளது.
இது ஒரு நல்ல முடிவு என்று குறிப்பிட்ட அவர், பத்துமலை திருத்தலத்தில் அபிவிருத்தி திட்டங்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கும் படி சிலாங்கூர் மாநில அரசுக்கு உத்தரவிட்ட பிரதமருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் சொன்னார்.

