முஸ்லிம் அல்லாதவர்களின் இறப்பு – வழிபாட்டு தலங்களுக்கு செல்ல அனுமதி பெற வேண்டுமா? பரிந்துரையை அமைச்சரவை ரத்து செய்தது!

கோலாலம்பூர் பிப் 7-
முஸ்லிம்கள் அல்லாத வழிபாட்டு தலங்கள் மற்றும் இறுதி சடங்குகளில் முஸ்லிம்கள் கலந்து கொள்ள அனுமதி பெற வேண்டும் என்று முன்மொழியப்பட்ட வழிகாட்டுதல்களை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அமைச்சரவை இன்று ரத்து செய்தது

பிரதமர் துறையின் மத விவகார அமைச்சர் நையிம் மொக்தார், தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் ஏரன் அகோ ஆகியோர் இதனை கூறினார்.

சர்ச்சையைத் தூண்டிய வழிகாட்டுதல்களை அமல்படுத்தும் யோசனைக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.

இதன் அடிப்படையில் இன்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பில் விவாதிக்கப்பட்டது.

இறுதியில் இந்த பரிந்துரைகளை அமைச்சரவை ரத்து செய்துள்ளது.

மேலும் ஜாக்கிம் ஆலோசனை வழங்கலாம். ஆனால் கொள்கை ரீதியாக அமல்படுத்த முடியாது என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles