

பத்துகேவ்ஸ், பிப்10-
பத்துமலை திருத்தலத்தில் கொண்டாடப்படும் தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று இரவு கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட வெள்ளி ரதம் இன்று மாலையில் பத்துமலை வந்தடைந்தது.
இவ்வாண்டும் வெள்ளியை ஊர்வலத்தை முன்னிட்டு கோம்பாங் பிபிபி தொகுதி சிலாங்கூர் மாநில பிபிசி கட்சியுடன் இணைந்து தண்ணீர் பந்தலை அமைத்து பக்தர்களின் தாகம் தீர்க்க சுவையான குளிர் பானங்களை வழங்கினர்.
தண்ணீர் பந்தலுக்கு சிறப்பு வருகை தந்த பிபிபி கட்சியின் தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா, சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன் மற்றும் விலாயா மாநில பிபிபி கட்சியின் தலைவர் சத்யா சுதாகரன் ஆகியோருக்கு கோம்பாக் தொகுதி தலைவர் ஏழுமலை மாலைகள் அணிவித்து சிறப்பித்தார்.

