கெர்லிங் ஸ்ரீ சுப்பிரமணியர் கோவில் மண்டபம் கட்டுவதற்கு கோலகுபு பாரு சட்டமன்ற உறுப்பினர் 10,000 வெள்ளி மானியம்!

காளிதாஸ் சுப்ரமணியம்
மா.பவளச்செல்வன்

கெர்லிங் பிப் 12-
உலுசிலாங்கூரில் பிரபலமான ஸ்ரீ  சுப்பிரமணியர் ஆலயத்தில் தைப்பூசத் திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெற்று வருகிறது.

தைப்பூச முதல் நாள் இரவு கோவில் நிர்வாகம் மற்றும் உலுசிலாங்கூர் இந்திய நகராண்மைக் கழக உறுப்பினர்களின் ஏற்பாட்டில் தைப்பூச இன்னிசை கலைவிழா விமரிசையாக நடைபெற்றது.

கெர்லிங் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய நிர்வாகம் தற்போது ஆலய வளாகத்தில் புதிய மண்டபத்தை கட்டும் பணியை தொடங்கி விட்டது.

கலைவிழவிற்கு சிறப்புப்பிரமுகராக கலந்துகொண்ட கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினர் பாங் சோக் தாவ் கோவில் மண்டப கட்டுமான பணிக்கு உதவும் வகையில்
தமது சார்பில் 10,000 வெள்ளி வழங்கினார்.

எழுப்பவிருக்கும் மண்டபத்தின் தொடக்கக்டட்ட  கட்டுமானப்பணிக்கு இந்த மாணியம் பெரும் துணையாக இருக்கும் என தாம் நம்புவதாக  பாங் சோக் தாவ் தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்கு சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி, உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்யா பிரகாஷ், உலுசிலாங்கூர் தேசிய முன்னணி தலைவர் டத்தோ முகமட் இசா, சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு, பத்தாங்காலி சட்டமன்ற ஒருங்க்ணைப்பாளர் சைபூடின் சாஃபி, உலுசிலாங்கூர் நகதாண்மைக் கழக தலைவர் புவான் ஜுலைஹா, துணைத் தலைவர் துவான் ஜவாலூட்டின், உலுசிலாங்கூர் பிரபலமான தொழில்முனைவரும் முன்னால் மஇகா உலுசிலாங்கூர் நிரந்தர தலைவருமான டத்தோ பி.எஸ். சாமி அனைவரும் முக்கிய பிரமுகர்களாக கலந்து சிறப்பித்தனர்.

மேலும் நிகழ்ச்சிக்கு சிறப்பு பிரமுகர்களாக கலந்து கொண்ட சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி 1 லட்சம் ரிங்கிட் மாணியமும், சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு 20,000 ரிங்கிட் மாணியமும் வழங்குவதாக தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாண்டு நடைபெற்ற இந்த கலைவிழாவை சிறப்புடன் ஏற்பாடு செய்திருக்கும் உலுசிலாங்கூர் இந்திய நகராண்மைக் கழக உறுப்பினர்களான புவனேஸ்வரன் பச்சைமுத்து, ராஜேஸ் ராவ், முருகன், ஸ்ரீகாந்த், துரை அன்பழகன், திலகேஸ்வரி மற்றும் கிராம தலைழர்கள் அனைவருக்கும் நன்றியையும் பாராட்டுகளையும் YB பாங் சோக் தாவ் தெரிவித்துக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles