


பத்துமலை பிப் 12-
தமிழ் கடவுள் முருகப் பெருமானுக்கு நேற்று உலகம் முழுவதும் தைப்பூசம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
உலகப் புகழ்பெற்ற பத்துமலை திருத்தலத்தில் தைப்பூசத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தண்ணீர் பந்தல், மோர் பந்தல், அன்னதானம் பத்துமலை திருத்தலத்தில் எங்கும் காண முடிந்தது.
தண்ணீர்ப் பந்தல் அமைத்து பக்தர்களின் தாகம் தீர்ப்பது மிகப் பெரிய அறச்செயலாகத் தொடர்ந்து வந்துள்ளது. அந்த வகையில் ஜனநாயக செயல் கட்சியின் தேசிய இளைஞர் பிரிவு மற்றும் சிலாங்கூர் மாநில ஜனநாயக செயல் கட்சி இளைஞர் அணி தண்ணீர் பந்தல் கூடாரம் பத்துமலை கோயில் எதிர்ப்புறத்தில் அமைத்தது.
தண்ணீர் பந்தல்கள் தைப்பூசத் திருவிழாவின் சிறப்பு அம்சமாகும். அவை, பக்தர்களின் தாகத்தை தணிப்பது மட்டுமல்லாது, மனித்நேயத்தையும் சமூக ஒற்றுமையையும் வளர்க்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

