வெள்ளிரதம் திரும்பி வரும்போது பக்தர்களின் வசதிக்காக நடமாடும் கழிப்பறைகள் அமையுங்கள்! சத்யா சுதாகரன்

கோலாலம்பூர் பிப் 12-
தமிழ் கடவுள் முருகப் பெருமானுக்கு கொண்டாப்பட்ட தைப்பூசத்தை முன்னிட்டு
இன்று மாலையில் நான்கு மணிக்கு மேல் பத்துமலை திருத்தலத்தில் இருந்து வெள்ளி ரதம் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தாய்க் கோவிலை வந்தடைகிறது.

பத்துமலையில் மாலை 4.00 மணிக்கு மேல் புறப்படும் வெள்ளி ரதம் நாளை அதிகாலை நேரத்தில் மாரியம்மன் கோவிலை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளி ரதம் ஊர்வலத்தில் வழி நெடுகிலும் ஏராளமான அர்ச்சனைகள். மேலும் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு உணவும் குளிர்பானங்கள் வழங்கப்படுகிறது.

இந்த தருணத்தில் பக்தர்களின் வசதிக்காக அதிக மொபைல் கழிப்பறைகள் அமைக்கப்பட வேண்டும் என்று பிபிபி கட்சியின் விலாயா மாநில தலைவர் சத்யா சுதாகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

டிபிகேஎல் இதனை கவனத்தில் கொண்டு ஆங்காங்கே நடமாடும் கழிப்பறைகள் அமைப்பதற்கு முன்வர வேண்டும் என்றார் அவர். பத்துமலை திருத்தலத்தில் இருந்து
14.2 கிலோமீட்டர் தூரம் வெறுங்காலுடன் பக்தர்கள் நடந்து வருகிறார்கள்.

பக்தர்களுக்கு கண்டிப்பாக மொபைல் கழிப்பறைகள் தேவைப்படுகிறது.
காரணம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளி ரதத்தின் முன்பும் பின்பும் நடந்து வருகிறார்கள்.

DBKL சாலை நெடுகிலும் குறைந்த எண்ணிக்கையிலான மொபைல் கழிப்பறைகள் அமைத்தால் அது பக்தர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கும்.

நேரம் காலம் தாழ்த்தாமல் இந்த விவகாரத்தில் கோலாலம்பூர் மாநகர் மன்றம் விரைந்து செயல்பட வேண்டும். விலாயா மாநில அமைச்சருடன் பணியாற்றி வரும் இந்திய அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி பக்தர்களுக்கு உதவிட முன்வர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles