100 வருடமாக இடுகாடு பிரச்சினை தீர்வு காணப்பட்டது; ஸ்ரீ முருகன் கோவிலுக்கு 40 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி!

ஈப்போ, பிப்.13: கடந்த 100 வருடங்களாக தஞ்சோங் ரம்புத்தானின் இந்து இடுகாடு பிரச்சினையை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் சுமூகமாக தீர்வு காணப்பட்டது. தற்போது இந்த இடுகாடு தஞ்சோங் ரம்புத்தான் சமயபுர அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய நிர்வாகத்தின் பராமரிப்பில் செயல்படும் என்று தம்புன் நாடாளுமன்ற தொகுதியின் சிறப்பு மேலதிகாரி டத்தோ ஆர்.சுரேஸ் குமார், இங்குள்ள தஞ்சோங் ரம்புத்தான் ஸ்ரீ முருகன் கோவிலின் தைப்பூச விழாவில் கலந்துக்கொண்டபோது கூறினார்.

இந்த இடுகாடு நிலப்பிரச்சினை இழுபறி நிலையில் பல்லாண்டுகளாக இருந்து வந்தது. கடந்த இரு வருடத்தில் பிரதமரின் பார்வைக்கு கொண்டு சென்று இப்பிரச்சினைக்கு நேர்த்தியான வழி பிறந்து விட்டது. குறிப்பாக, கிந்தா மாவட்ட நிலவள இலாகாவினர் இந்த இடுகாட்டு நிலத்தை சமயபுர அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் நிர்வாகத்தால் பராமரிக்கப்படும் என்று கடிதம் ஒன்று வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் இனி இந்த நிலத்தை சமயபுர ஸ்ரீ மகா மாரியம்பன் ஆலயத்தின் பார்வையில் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த 100 வருட கால போரட்த்தின் போது ஒரு சில தரப்பினர் இந்த இடுகாட்டு நிலத்தை கையகப்படுத்த பல முயற்சிகளை ஒரு கட்சியினர் முயன்றனர். இந்த இடுகாட்டு நிலத்தில் சில ” மினரல்” இருப்பாக அறிய வருகிறது. அவர்களின் முயற்சி இறுதியில் தோல்வியில் முடிந்தது. இப்பொழுது இந்த இடுகாட்டு நிலம் ஆலய பார்வையில் செயல்பட்டு வரும் என்று அவர் உறுதியுடன் கூறினார். அதற்கான உறுதிக்கடி தத்தை ஆலயத்தலைவர் முருகையாவிடம் ஒப்டைக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார்

இவ்வாண்டு திருவிழா சிறப்பாக நடைபெற 40 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவியை ஆலயத்திற்கு டத்தோ ஆர். சுரேஸ் குமார் வாயிலாக கிடைக்கப்பெற்றனர். ஆலயத்தலைவர் ராஜேந்திரன் காசோலையை பெற்றுக்கொண்டதோடு இந்த நிதி ஆலய வங்கி கணக்கில் சேர்ந்து விட்டதாக அறிவிப்பும் செய்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles