
பேரா, சுங்கை சிப்புட் சுங்கை குருடா தோட்டத்தில் 2.8 ஏக்கர் நிலத்தில் நிர்மானிக்கப்பட்டு வந்த சுங்கை ரேலா தோட்டத் தமிழ்ப்பள்ளியின் கட்டுமானப்பணி நிறைபெற்றது.
கடந்த 10 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்பள்ளிக் கூட கட்டுமானப்பணி நிறைவு பெற்றதாக அப்பள்ளியின் வாரியக் குழுத் தலைவர் சண்முகவேலு சுப்பிரமணியம் கூறினார்
.
பல்வேறு சவால்களை கடந்து நிறைவு பெற்ற சுங்கை ரேலா தோட்டத் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டிடக் கட்டுமானத் திட்டம் இறுதியாக நிறைவடைந்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
63 லட்சம் ரிங்கிட் செலவில் நிர்மானிக்கப்பட்ட இந்தப் பள்ளியில் மாணவர்கள் விரைவில் கல்வியை தொடர உள்ளனர் என்று குறிப்பிட்டார்.
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்த திட்டத்திட்டத்திற்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் சண்முகவேல் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

இப்பள்ளியை நிர்மானிக்க மாற்றுப் 2.8 ஏக்கர் நிலத்தை தேசிய நில நிதிக கூட்டுறவுச் சங்கம் வழங்கியது இந்த நடைபெற்ற சிறப்பு பூஜைக்குப் பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்
இந்தஙபள்ளிப் கூடம் பலவேறு காரணங்களால் காலதாமதம் ஏற்பட்டது .இதற்கு வாரியக் குழு, பள்ளி நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் சங்கம் வழங்கிய பேராதரவுக்கு தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்கத்துன் தலைமை நிர்வாகி டத்தோ பி. சகாதேவன் பாராட்டினார்.
பள்ளியில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் செயல்முறை அதிகாரி டத்தோ கிளிராஜ் சோமசுந்தமும் கலந்துக்கொண்டார்.
சகல வசதிகள் கொட்ட சிறந்த கல்வியை மேற்கொள்வார்கள் என்றுங பள்ளியின் தலைமையாசிரியர் சுமதி முனியாண்டி கூறினார்
இப்பள்ளியில் 10 ஆசிரியர்கள் கல்வி பணிபுரிந்து வருகிறார்கள் 32 மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள்.

