
புத்ரா ஜெயா, பிப் 13-
மனிதவள அமைச்சின் தேசிய ஊதிய உடன்பாடு மன்றத்தின் துணைத் தலைவராக திருமதி ராஜேஸ்வரி கருப்பையா இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தொழில் நீதிமன்றத்தின் முன்னாள் தலைவரான அவர்
1 பிப்ரவரி 2025 முதல் 30 செப்டம்பர் 2026 வரை இந்த பதவியில் இருப்பார்
இந்த பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் இந்தியப் பெண்மணி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமதி ராஜேஸ்வரி கருப்பையா 32 ஆண்டுகளுக்கும் மேலான நிபுணத்துவத்துடன் விரிவான அனுபவம் பெற்றவர்.
தொழில்துறை உறவுகள் சட்டம், வேலை வாய்ப்பு சட்டம் மற்றும்
பெருநிறுவன சட்டத்துறையில் இவர் நிறைந்த அனுபவம் பெற்றுள்ளார்.
இவர் LLB (Hons) தகுதி பெற்றுள்ளார்.
லண்டன் பல்கலைக்கழகம் மற்றும் MCIArb அங்கீகாரம் பெற்ற மத்தியஸ்தர் ஆவார்.
மலேசிய தொழில்துறை நீதிமன்றத்தின் தலைவராக அவரது வாழ்க்கை முழுவதும்
நிலுவையில் உள்ள வழக்குகளை தீர்ப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
அதனால் நிர்ணயிக்கப்பட்ட KPI இலக்கையும் அவர் முடித்துவிட்டார்
பணிநீக்கங்கள், மறுசீரமைப்பு உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட வழக்குகளை இவர் வெற்றிகரமாக தீர்வு கண்டுள்ளார்.
திருமதி ராஜேஸ்வரி கருப்பையா வாஷிங்டன் டி.சி.யில் அமைந்துள்ள உலக வங்கியில் சட்ட ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.
மலேசியாவில் தொழிலாளர் கொள்கையை மேம்படுத்துதல், ஊதியக் கொள்கை அறிமுகம் உட்பட
மலேசியாவில் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் போன்ற துறைகளில் இவர் பங்களிப்பு அளப்பரியது.
நேற்று மனிதவள அமைச்சர் ஸ்டிவன் சிம் பதவி நியமனம் கடிதத்தை ராஜேஸ்வரி கருப்பையாவிடம் வழங்கினார்.

