வெளிநாட்டில் பிறந்த தங்களது குழந்தைகளுக்கு குடியுரிமை கோரி மேல்முறையீடு செய்ய மலேசியா தாய்மார்களுக்கு பெடரல் நீதிமன்றம் அனுமதி!

மலேசிய தாய்மார்கள் வெளிநாட்டில் பிறந்த தங்களது குழந்தைகளுக்கு மலேசியக் குடியுரிமை பெறுவதற்கு ஏதுவாக மேல் முறையீடு செய்ய பெடரல் நீதிமன்றம் இன்று அனுமதியை வழங்கியுள்ளது.

மலேசியாவின் பாரபட்சமான சட்டங்களுக்கு எதிராக மலேசியா தாய்மார்கள் சட்டப்பூர்வ சவாலை தொடரலாம் என்று பெடரல் நீதிமன்றம் தனது தீர்ப்பில் அறிவித்துள்ளது.

சபா – சரவாக் மாநில தலைமை நீதிபதி டான்ஸ்ரீ அபாங் இஸ்கந்தர் அபாங் ஹாஷிம் தலைமையிலான டத்தோ வொரோன் ஓங், டத்தோ மேரி லிம் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழு ஒருமனதாக இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

மலேசியத் தாய்மார்கள் தங்களது மேல்முறையீட்டைத் தொடரவும் இந்த மூன்று நீதிபதிகள் அனுமதி வழங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டில் பிறக்கும் தங்களது குழந்தைகளுக்கு குடியுரிமை பெற மலேசியா தாய்மார்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியா தந்தைகளின் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படுவதை போல் தங்களது குழந்தைகளுக்கும் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று மலேசிய தாய்மார்கள் சட்ட ரீதியில் போராட்டம் நடத்தி கொண்டிருக்கிறார்கள். இன்று பெடரல் நீதிமன்றத்தின் தீர்ப்பு இவர்களுக்கு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles