
மனித உரிமைகளுக்கு கொடூரமான சொஸ்மா எனப்படும் பாதுகாப்பு சட்டத்தை அரசாங்கம் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி கேட்டுக் கொண்டார்.
உள்நாட்டு பாதுகாப்பு சட்டம் மற்றும் அவசரக்கால சட்டத்துக்கு பதிலாக இந்த சொஸ்மா சட்டம் கொண்டு வரப்பட்டது.
விசாரணையின்றி ஒருவரை 28 நாட்கள் தடுத்து வைக்க இந்த கொடூர சட்டம் வகையை செய்கிறது.
எந்த ஊரு மனிதனும் தன் குற்றம் எதுவாக இருந்தாலும் விசாரணைக்கு வராமல் தடுத்து வைக்க கூடாது.
கடந்த காலங்களில் சொஸ்மா சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பக்கத்தான் ஹரப்பான் எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் வாக்களித்தனர்.
அந்த வகையில் இந்த சட்டத்தை அரசாங்கம் மறு பரிசீலனை செய்யும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
தற்போது சொஸ்மா சட்டத்தின் கீழ் ஏராளமான இந்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இதனால் அவர்களின் குடும்பங்கள் பரிதவிக்கிறது என்றார்.

