

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான புதிய அமைச்சரவையில் மனித வள அமைச்சராக பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி சிவகுமார் பதவி ஏற்றிருக்கும் வேளையில் அந்நியத் தொழிலாளர்கள் பிரச்சனைக்கு நல்ல முறையில் தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.
மலேசியா இந்தியர் பொற்கொல்லர் சங்கம் எதிர் நோக்கி இருக்கும் அந்நியத் தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சனைக்கு அவர் சிறந்த முறையில் தீர்வு காண வேண்டும் என்று மலேசிய இந்தியர் போற்கொல்லர் சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ரசூல் கேட்டுக் கொண்டுள்ளார்.
பல ஆண்டுகளாக நாங்கள் இந்த பிரச்சினையை எதிர் நோக்கி இருக்கிறோம்.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உலகம் போற்றும் ஒரு மாபெரும் தலைவராக விளங்கும் வேளையில் அவர் தலைமையில் நாட்டின் பொருளாதாரம் மேலும் வலுவடையும் என்பதில் ஐயமில்லை.
அதேசமயம் நாங்கள் எதிர் நோக்கி இருக்கும் தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சனைக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் மனித வள அமைச்சர் சிவகுமாரும் தீர்வு காண வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

