நீதிமன்றத்தில் சந்திப்போம்! அன்வாருக்கு கெடா மந்திரி பெசார் பதில்

தம்புன் நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற்ற பெரிக்கத்தான் நேஷனல் பிரச்சாரக் கூட்டத்தின் போது தாம் பண்பு நெறி இல்லாதவர் என்ற தோரணையில் கருத்துகளை வெளியிட்டதற்காக கெடா மந்திரி புசார் முகமது சனுசி முகமது நோருக்கு எதிராக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவதூறு வழக்கு தொடுத்துள்ளார்.

இந்த வழக்கு மனுவை எஸ்.என்.நாயர் அண்ட் பார்ட்னர்ஸ் வழக்கறிஞர் நிறுவனத்தின் சார்பில் அலோர் ஸ்டார் உயர்நீதிமன்றத்தில் 75 வயதான டத்தோஸ்ரீ அன்வார் நேற்று தாக்கல் செய்தார்.

இந்த மனுவில் 48 வயதான கெடா மந்திரி பெசார் சனுசியை ஒரே பிரதிவாதியாக பெயர் குறிப்பிட்டுள்ளார்.

இது பற்றி கருத்துரைத்த கெடா மந்திரி பெசார் சனுசி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரை நீதிமன்றத்தில் சந்திக்க தயார் என்று பதில் அளித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles