
காளிதாஸ் சுப்ரமணியம்
கோத்தா கெமுனிங், பிப் 15-
ம இகா தேசிய மகளிர் பிரிவு ஏற்பாட்டில் இன்று கோத்தா கெமுனிங் லேக்சைட் பார்க்கில் நடைப்போட்டி மிகவும் விமரிசையாக நடைப்பெற்றது
ஆரோக்கியமான வாழ்க்கை நாம் வாழ வேண்டும் என்பதை நினைவுப்படுத்தும் வகையில் மஇகா மகளிர் பிரிவினரின் ஏற்பாட்டில் TSV நடைப்போட்டி இடம் பெற்றது.

210 பேர் இப்போட்டியில் கலந்து கொண்ட வேளையில் ஒன்று முதல் 20 வெற்றியாளர்களுக்கு பதக்கம் வழங்க்பப்பட்டன. 1 முதல் 3 நிலை வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கமும் பரிசுக் கோப்பைகளும் வழங்கப்பட்டன.

மஇகாவின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், உதவித் தலைவர்கள் டத்தோ அசோஜன், டத்தோ டி. முருகையா, தேசிய விளையாட்டுப் பிரிவுத் தலைவர் ஆண்ட்ரூ டேவிட் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றிப் பெற்றவர்கள் பரிசுகளை எடுத்து வழங்கி பாராட்டினார்.

மஇகா மகளிர் பிரிவினர் மத்தியில் ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையிலும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக மஇகாவின் மகளிர் பிரிவுத் தலைவி மாண்புமிகு சரஸ்வதி நல்லத்தம்பி தெரிவித்தார்.

