

பத்தாங் பெர்ஜூந்தை, பிப் 15-
தோட்டப் பாட்டாளிகளுக்கு என்று
பெஸ்தாரி ஜெயா மடானி ஹார்மோனி மக்கள் வீடமைப்புத் திட்டம் மேற்கொ ள்ளப்படுகிறது.
இன்று பெஸ்தாரி ஜெயாவுக்கு சிறப்பு வருகை தந்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை தோட்ட பாட்டாளிகள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
பெர்ஜெயா கார்ப்பரேஷன் பெர்ஹாட் நிறுவனம் எஸ்டேட் நிலத்தை அரசாங்கத்திடம் ஒப்படைத்திருக்கிறது.
தோட்டப் பாட்டாளிகளுக்காகா
வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சு இந்த வீடமைப்புத் திட்டத்தை மேற்கொள்ளும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
சொந்த வீடுகளுக்காக கடந்த 27 ஆண்டுகளாக போராடி வரும் தோட்டப் பாட்டாளிகளுக்கு நல்ல காலம் பிறந்துள்ளது டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
வீடமைப்பு, ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் நில உரிமையாளர் டான்ஸ்ரீ வின்சன்ட் டானுடன் பேசி நிலத்தை பெற்று தந்திருக்கிறார். அவருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.
இதனிடையே தோட்ட பாட்டாளிகளுக்கு சொந்த வீடுகள் கிடைக்க பல ஆண்டுகளாக பாட்டாளிகளுடன் போராடி வந்த பிஎஸ்எம் கட்சியின் துணைத் தலைவர் அருட் செல்வம் பிரதமருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
பல ஆண்டுகளாக போராடி வரும் தோட்ட பாட்டாளிகளுக்கு இன்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசின் கீழ் நல்ல விடிவுகாலம் பிறந்துள்ளது என்று பாராட்டினார்.
இந்த நிகழ்வில் டான்ஸ்ரீ வின்சென்ட் டான், சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

