6 இந்தியர் கூட்டுறவுக் கழகங்களுக்கு1 லட்சத்து 75,000 வெள்ளி மானியம் டத்தோஸ்ரீ இரமணனுக்கு நேசா தலைவர் டத்தோ சசிகுமார் பாராட்டு

கோலாலம்பூர் பிப் 15-
நாட்டில் உள்ள ஆறு இந்தியர் கூட்டுறவுக் கழகங்களுக்கு 1 லட்சத்து 75 ஆயிரம் வெள்ளி மானியம் கிடைக்க பேருதவி புரிந்த தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். இரமணனுக்கு நேசா கூட்டுறவு கழகத்தின் தலைவர் டத்தோ பி.சசிகுமார் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

Koparasi Nesa Pelbagai Berhad கழகத்திற்கு 30,000 வெள்ளி,
Koparasi Guru -Guru Sekolah India Perak Berhad கழகத்திற்கு 30,000 வெள்ளி , Koparasi Generasi Berwawasan Perak Berhad கழகத்திற்கு 30,
000 வெள்ளி, Koparasi India Salak Kuala Kangsar Berhad கழகத்திற்கு 30,000 வெள்ளி, Koparasi Serbaguna Kebangsaan Berhad கழகத்திற்கு 28,000 வெள்ளி மற்றும் Koparasi Perniaga – Perniaga India Malaysia கழகத்திற்கு 27,600 வெள்ளி மானியம் நேற்று நேரடியாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய கூட்டுறவு ஆணையத்தின் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு தலைமை ஏற்ற டத்தோஸ்ரீ இரமணன் ஆறு கூட்டுறவு கழகங்களுக்கு மானியத்தை நேரடியாக வழங்கினார்.

மலேசிய வரலாற்றில் இந்தியர் கூட்டுறவு கழகங்களுக்கு இதுபோன்ற மானியம் வழங்கப்படுவது முதல் முறையாகும்.

தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு துறை துணை அமைச்சராக பதவி ஏற்றது முதல் டத்தோஸ்ரீ இரமணன் இந்திய சமுதாயத்திற்கு மிகப்பெரிய அளவில் சேவைகளை வழங்கி வருகிறார்.

இந்த நாட்டில் இந்தியர் கூட்டுறவு கழகங்கள் வெற்றி நடை போட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் மலேசிய இந்தியர் கூட்டுறவு மாநாட்டையும் கடந்த ஆண்டில் வெற்றிகரமாக நடத்தினார்.

மலேசிய கூட்டுறவு ஆணையத்தின் மூலம் மானியம் பெறுவதற்கு இந்தியர் கூட்டுறவு கழகங்கள் முன் வர வேண்டும் என்று டத்தோஸ்ரீ இரமணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வாய்ப்பை இந்தியர் கூட்டுறவு கழகங்கள் நல்ல முறையில் பயன் படுத்தி கொள்ள வேண்டும் என்று டத்தோ சசிகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles