
போர்ட் டிக்சன்,பிப்.17-
சாயாங் டி சாயாங் 2.0 திட்டம் கடந்த 8 பிப்ரவரி 2025 அன்று தஞ்சோங் துவான் லைட்ஹாவ்ஸில் வெற்றிகரமாக நடைப்பெற்றது.
இந்த வரலாற்று நிகழ்வில் 135 உடல்பேறு குறைந்த குழந்தைகள் பங்கேற்று, மலேசியா சாதனை (Malaysia Book of Records) புத்தகத்தில் அதிகளவில் உடல்பேறு குறைந்த குழந்தைகள் பங்கேற்ற சாதனை எனப் பதியப்பட்டுள்ளது. மேலும், 800-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இணைந்து இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தினர்.
இந்த நிகழ்வு, மலேசியா ரோட்டரி கிளப்புகள் அறக்கட்டளை (Yayasan Kelab-Kelab Rotary Malaysia), போர்ட் டிக்சன் ரோட்டரி கிளப், போர்ட் டிக்சன் பந்தாய் லயன்ஸ் கிளப், மற்றும் போர்ட் டிக்சன் மாவட்ட சமூக நல அலுவலகம் ஆகியவற்றின் கூட்டணியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற குழந்தைகள் போர்ட் டிக்சனில் உள்ள ஏழு PDK (Pertubuhan Pemulihan Dalam Komuniti) மையங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். மேலும், ரோட்டரி கிளப் குரூப் 17, தன்னார்வலர்கள், தனியார் நிறுவனங்கள், மற்றும் அரசுத்துறைகள் ஆகியவற்றின் உறுதுணையால் குழந்தைகள் சிறந்த அனுபவத்தைப் பெற்றனர்.

இந்த சிறப்புமிக்க நிகழ்வில் YB டாக்டர் ராஜசேகரன் (ஸ்ரீ தஞ்சோங் சட்டமன்ற உறுப்பினர்), மாவட்ட ஆளுநர் DG அர்விந்த் மற்றும் ஃபர்ஸ்ட் லேடி சிங் யி சின், மற்றும் லயன்ஸ் கிளப் D308 B3 லயன் கண் சீ பியோ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இத்துடன், குரூப் 17 உதவி ஆளுநர் ஜாக்சன், போர்ட் டிக்சன் ரோட்டரி கிளப் தலைவர் தேவிகி, மற்றும் போர்ட் டிக்சன் பந்தாய் லயன்ஸ் கிளப் தலைவர் ஜேக்கப் ராஜகபூர் ஆகியோருக்கு, அவர்களின் தலைமையிலும் அர்ப்பணிப்பிலும் இந்நிகழ்வை சிறப்பாக நடத்தியதற்காக, தனிப்பட்ட நன்றி தெரிவிக்கப்பட்டது.

மேலும், திரு. நட்வாலா, மற்றும் Sayang di Sayangi 2.0 நிகழ்வை நினைவுபடுத்தும் ஒரு முக்கியமான மற்றும் சமூகத்திற்கு பயனுள்ளதாக மாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

