
ஷா ஆலம், பிப். 19 – எதிர்வரும் சனிக்கிழமை கோல குபு பாரு தொகுதி நிலையில் நடைபெறும் இலவச சுகாதார பரிசோதனை திட்டத்தில் பங்கேற்க பொதுமக்கள் அழைக்கப்படுகிறார்கள்
இந்த இலவச பரிசோதனை உலு சிலாங்கூர், தாமான் ராசா ஜெயா, கம்போங் சுவாங் ராசா சமூக மண்டபத்தில் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெறும்.
இந்த சிலாங்கூர் சாரிங் நிகழ்வுக்கு வருகை தந்து பொதுவான உடல் பரிசோதனை, இரத்தம், சிறுநீர், புற்றுநோய், கண் மற்றும் பல் பரிசோதனைகளை இலவசமாகப் மேற்கொள்வதற்கான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
செலங்கா செயலி வாயிலாக பரிசோதனைக்கு முன்பதிவு செய்யும்படி பங்கேற்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தனி நபர் இடர் மதிப்பீட்டின் அடிப்படையில் இந்த மருத்துவப் பரிசோதனைச் சேவை வழங்கப்படும். ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் செல்கேர் ஹாட்லைனை 1-800-22-6600 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

