Power Shuttlers BC ஏற்பாட்டில் உலகளாவிய பெண்களுக்கான இரட்டையர் பிரிவு பேட்மிண்டன் போட்டி!

கோலாலம்பூர் பிப் 20-
Power Shuttlers BC ஏற்பாட்டில் வரும் மார்ச் 22 ஆம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 12. 00 முதல் மாலை 6.00 மணிவரை கிள்ளான் Friendly Badminton Academy Kawasaki அரங்கில் மிகப்பெரிய பெண்களுக்கான இரட்டையர் பிரிவு பேட்மிண்டன் போட்டி நடைபெறுகிறது இந்த பேட்மிண்டன் போட்டிக்கு சிலாங்கூர் இந்தியர் பேட்மிண்டன் சங்கத்தின் சார்பில் விக்னேஸ்வரன் முழு ஆதரவு வழங்கி உள்ளார்.

ஒரு குழுவில் நான்கு பேர் இடம் பெற்றிருக்க வேண்டும். ஒருவருக்கு தலா 20 வெள்ளி கட்டணம். இந்த போட்டியில் வெற்றி பெறும் குழுவுக்கு பேட்மிண்டன் ரேக்கெட் பரிசுகளாக வழங்கப்படும்.

இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் குழுவுக்கு ரொக்கமும் 3,4 ஆவது இடங்களை பிடிக்கும் குழுக்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்று பயிற்றுநர் தர்வின் தெரிவித்தார்.

போட்டியில் பங்கேற்க விரும்புவோர் தொடர்புக்கு
016-3806099 Harmony அல்லது 012-3542557 சரஸ் ஆகியோரை அழைக்கலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles