டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் – டத்தோஸ்ரீ சரவணன் பெயரில் மீபா ஏற்பாட்டில் இளையோர் கால்பந்து போட்டி!

கோலாலம்பூர் பிப் 22-
மீபா எனப்படும் மலேசிய இந்தியர் கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் ம இகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் மற்றும் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் பெயரில் இளையோர் கிண்ண கால்பந்து போட்டி மிகப்பெரிய அளவில் நடத்தப்படுகிறது என்று அதன் தலைவர் அன்பானந்தன் தெரிவித்தார்.

வரும் ஏப்ரல் மாதம் ஜொகூர் பாசிர் கூடாங்கில் 16 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பங்கேற்கும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கிண்ண கால்பந்து போட்டி நடத்தப்படுகிறது.

அதேசமயம் ஆகஸ்ட் மாதம் பேராக் மாநிலத்தில் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பங்கேற்கும் டத்தோஸ்ரீ சரவணன் கிண்ணக் கால்பந்து போட்டி நடத்தப்படுகிறது.

மலேசிய இந்தியர் கால்பந்து சங்கத்திற்கு பெரும் ஆதரவை வழங்கி வரும் இருவரின் பெயரில் கால்பந்து போட்டியை நடத்துவது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று அவர் சொன்னார்.

இவ்விரு போட்டிகள் மத்தியில் மகளிருக்கான கால்பந்து போட்டியும் மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்படும்.

கடந்த ஆண்டு நடைபெற்ற பெண்கள் கால்பந்து போட்டியில் 600 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து சிறப்பித்தனர்.

இது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது என்று அவர் சொன்னார்.

இன்று மீபா ஏற்பாட்டில் பயிற்றுநர்களுக்கு பயிற்சி பட்டறையை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றியபோது அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles