மீபாவின் சாதனைகள் வரலாற்றில் நிலைத்திருக்கும்! தலைவர் அன்பானந்தன் கூறுகிறார்

கோலாலம்பூர் பிப் 22-
மலேசிய கால்பந்து துறையில் மீபா எனப்படும் மலேசிய இந்தியர் கால்பந்து சங்கத்தின் சாதனைகள் வரலாற்றில் நிலைத்திருக்கும் என்று அதன் தலைவர் அன்பானந்தன் தெரிவித்தார்.

2016 இல் கிண்ணத்தை வென்று மீபா சாதனை படைத்தது.

அதன் பின்னர் மலேசிய சூப்பர் லீக் கிண்ண போட்டியில் விளையாடியது.

பொருளாதார நெருக்கடியின் காரணமாக மலேசிய சூப்பர் கிண்ண போட்டியில் தொடர்ந்து பங்கேற்க முடியவில்லை.

இப்போது தமிழ்ப் பள்ளிகள் இடையே மிகப்பெரிய அளவில் கால்பந்து போட்டியை வெற்றிகரமாக நடத்தி வருகிறது

ம இகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ் ஏ. விக்னேஸ்வரன், துணை தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் மற்றும் பெர்ஜெயா குருப் அதரவினால் எங்களால் தமிழ்ப் பள்ளிகள் இடையிலான கால்பந்து போட்டியை நடத்த முடிகிறது.

நல்லுள்ளம் படைத்தவர்கள் வழங்கும் உதவிகள் மூலம் நாங்கள் பல போட்டிகளை நடத்தி வருகிறோம் என்று அவர் சொன்னார்.

இன்று மீபா ஏற்பாட்டில் பயிற்றுநர்களுக்கு பயிற்சி பட்டறை மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

மீபா தலைவர் அன்பானந்தன் மற்றும் துணை தலைவர் ஏஎஸ்பி இராஜன் ஆகியோர் தலைமையில் இந்த பயிற்சி பட்டறை நடைபெற்றது.

மீபா பயிற்றுநர் ஒருங்கிணைப்பாளர் கமலேஷ் மற்றும்
டாக்டர் அண்ணாதுரை ஆகியோர் இந்த பயிற்சி பட்டறையை சிறப்பாக நடத்தினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles