இடுகாடு கொட்டகை சரிந்து விழுந்து நான்கு மாதம் உருண்டோடியும் பழது பார்ப்பு இல்லை

பாரிட், பிப் 23-
பாரிட் பட்டணத்தில் செயல்படும் ஒரு பிரதான ஆலய பராமரிப்பின் கீழ் அமைந்துள்ள இந்து இடுகாட்டின் கொட்டகை விழுந்து நான்கு மாதங்கள் ஆகிவிட்டதும் அதனை பழுது பார்த்து பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று இங்குள்ள இந்திய
இளைஞர்கள் குழு கேட்டு கொண்டது.

அடக்கம் அல்லது தகனம் முடிவடைந்து களைப்பாற பயன்படுத்தப்படும்
இந்த கொட்டகை அவலை நிலை கவலையடைய செய்துள்ளதாக
குழு சார்பாக முன்னாள் கால்பந்து ஆட்டக்காரர் நாகராஜா முத்து
வருத்தம் தெரிவித்தார்.

மயான சுற்றுப்புறம் புதர் மண்டி கிடப்பது வேதனை அளிப்பதாக
குறிப்பிட்ட அவர் மயானம் இருப்பதை
வெளிப்படுத்தும் அடையாள பலகை பொறுத்துவதில் மெத்தனம் வேண்டாம்
என நினைவூட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles