
காளிதாஸ் சுப்ரமணியம்
ஷாஆலம்: பிப் 23-
நாட்டில் உள்ள இடைநிலைப் பள்ளிகளில் பயிலும் இந்திய மாணவர்கள் அதிக அளவில் அறிவியல் பாடத்தை தேர்வு செய்யும் இலக்கு அதிகரிக்கப்பட வேண்டும்.
இந்த இலக்கை அடைய
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் முதன்மை இலக்கு என்று அதன் ஒருங்கிணைப்பாளர் தர்மராஜ் கூறினார்.
கடந்த 43 ஆண்டுகளாக கல்வியை இலக்காகக் கொண்டு இந்திய மாணவர்களுக்கு கல்வி சேவையை ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் வழங்கி வருகிறது.
இந்நிலையம் இதுவரை 30,000-க்கும் மேற்பட்ட இந்திய பட்டதாரி மாணவர்களை உருவாக்கி சாதனை படைத்துள்ளது.
இந்த வரலாற்றில் முதல் முறையாக அதன் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் ஷாஆலம் மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியில் திறக்கப்பட்டுள்ளது.
பள்ளி நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து இந்தக் கல்வி மையம் வெற்றிகரமாக செயல்படுகிறது.
மாணவர்களுக்கு கல்வி போதிக்கும் இடமாக மட்டுமில்லாமல் மாணவர்கள் இடையே சிந்தனை மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.
ஒழுக்க நெறிகளை மேம்படுத்த வேண்டும்.
4-ஆம் தொழில் புரட்சியின் அறைகூவல்களை எதிர்கொள்ள பகுப்பாய்வு, நுண் சிந்தனை திறன், பிரச்சினைக்கு தீர்வு காணும் திறன் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு ஸ்ரீ முருகன் நிலையம் செயல்படவுள்ளது.

அதே வேளையில் இடைநிலைப் பள்ளியில் படிவம் மூன்று முடிந்த பின் படிவம் நான்குக்கு செல்லும்போது மாணவர்கள் அறிவியல் பிரிவைத் தேர்வு செய்ய வேண்டும்.
குறிப்பாக அந்தத் துறைக்கு நமது மாணவர்கள் தகுதியானவர்களாகவும் தேர்ச்சி பெற்றவர்களாகவும் உருவாக வேண்டும்.
காரணம் எஸ்பிஎம் தேர்வுக்கு பின் கல்லூரி பல்கலைக்கழகங்கள் செல்லும்போது இந்த அறிவியல் துறை பாடத்திட்டங்கள் முக்கிய அம்சமாக விளங்குகிறது.
ஆகவே இந்த இலக்கை நோக்கி ஷாஆலம் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் செயல்பட
உள்ளது என்று அவர் சொன்னார்.
நமது மாணவர்கள் கல்வியில் சாதிக்க வேண்டும். அதற்கான முயற்சிகளையும் நாங்கள் தொடர்வோம்.
ஷாஆலம் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் தங்களின் பிள்ளைகளை ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தில் சேர்த்து அவர்களையும் வெற்றியாளர்களாக உருவாக்கலாம் என அவர் கேட்டுக் கொண்டார்

