ஆப்பிரிக்கா, லத்தின் அமெரிக்கா நாடுகளுடன் வர்த்தக உறவை வலுப்படுத்த மலேசியா தயார்: பிரதமர் அன்வார்

ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட பல வளரும் நாடுகளுடன் வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கு ஏதுவாகப் புதிய வழிகளை உருவாக்க மலேசியா தயாராக உள்ளது என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். 

தற்போதைய உலகளாவிய புவிசார் அரசியல் சூழலில் ஏற்படும் மாற்றங்கள், அனைத்துலக  உறவு வியூகங்களுக்கேற்ப நம்மை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டியதன்  அவசியத்தை ஏற்படுத்துகின்றன என்று அவர் கூறினார்.

இருப்பினும் சில சிக்கல்களை நாம் நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதோடு  திட்டக் கண்ணோட்டத்தில் சில மாற்றங்களையும் செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

முதலாவதாக, அமெரிக்க அதிபர்  டொனால்ட் டிரம்பின் தலைமையுடனான உறுதியற்ற தன்மை,  புவிசார் அரசியல் அழுத்தம், ஐரோப்பா, சீனாவின் எதிர்வினைகள் மற்றும் காசா (பாலஸ்தீனம்) மற்றும் உக்ரேன் (போரின்) சமீபத்திய  மேம்பாடுகள் அவையாகும் என்று அவர் தெரிவித்தார்.

மடானி 2025 அரசாங்க அமைச்சரவை கலந்துரையாடல்  செய்தியாளர் சந்திப்பில் அன்வார் இவ்வாறு கூறினார். 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles